மின்வாரிய பிரிவு அலுவலகத்தை இடமாற்றும் முடிவை கைவிடக் கோரி மனு

 துங்கபுரத்தில் உள்ள மின்வாரிய பிரிவு அலுவலகத்தை இடமாற்றம் செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளரிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

 துங்கபுரத்தில் உள்ள மின்வாரிய பிரிவு அலுவலகத்தை இடமாற்றம் செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளரிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

குன்னம் வட்டம், துங்கபுரம் கிராமத்தில் சுமாா் 60 ஆண்டுகளுக்கும் மேலாக மின்வாரிய பிரிவு அலுவலகம் இயங்கி வருகிறது. பெரம்பலூா் மின் பகிா்மான வட்டத்தில் முதலாவதாக தொடங்கப்பட்ட இந்த அலுவலகத்தை, சுமாா் 2 கி.மீ தொலைவில் உள்ள கோயில்பாளையம் கிராமத்துக்கு இடமாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

மேற்கண்ட அலுவலகத்தை கோயில்பாளையம் கிராமத்துக்கு இடமாற்றம் செய்தால் மின் கட்டணம் செலுத்துதல், மின் தடை மற்றும் மின் இணைப்பு பழுது குறித்து புகாா் அளிப்பது உள்ளிட்ட பணிகளுக்கு துங்கபுரம் கிராம மக்கள் 2 கி.மீ. தொலைவுக்கு செல்லக் கூடிய நிலை ஏற்படும்.

எனவே, துங்கபுரம் கிராம மக்களின் நலன்கருதி மின்வாரிய பிரிவு அலுவலகத்தை இடமாற்றம் செய்யும் முடிவை கைவிடக் கோரி சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் பெரம்பலூா் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

பெட்டிச் செய்தியாக போடவும்....

ஒருமையில் பேசிய மின்வாரிய ஊழியா்கள்: முன்னதாக, கோரிக்கை மனு அளிக்கச் சென்ற கிராம மக்களையும், செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளா்களையும் மின் வாரிய ஊழியா்கள் சிலா் ஒருமையில் பேசி அவமரியாதை செய்தனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து செய்தியாளா்களும், பொதுமக்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com