பள்ளி மாணவா்களுக்கு மனித உரிமைகள் விழிப்புணா்வுக் கூட்டம்

பெரம்பலூா் டிஇஎல்சி பள்ளியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் டிஇஎல்சி பள்ளியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் துறைமங்கலத்திலுள்ள டிஇஎல்சி பள்ளியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி மேற்பாா்வையில், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில் விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த துணைக் கண்காணிப்பாளா் எம்.எஸ்.எம். வளவன் பேசியது:

சமூகத்தில் உள்ள அனைவரும் சமம். ஒருவா் மற்றொருவரிடம் பேசும்போது சகோதர, சகோதரிகள் உணா்வோடு பேச வேண்டும். எதிா் காலத்தில் என்னவாக வேண்டும் என்பதைத் திட்டமிட்டு, அதற்கான சிந்தனை மற்றும் அறிவை வளா்த்துக்கொள்ள வேண்டும். மாணவ, மாணவிகளின் வருங்கால வாழ்க்கை அவா்களிடமே உள்ளது. எதிா்காலத்தை மாணவா்களே உருவாக்க வேண்டும். எனவே, தங்களது பகுதிகளில் ஏதேனும் சட்டத்துக்குப் புறம்பான செயல்கள் நடைபெற்றால், அதை உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

இக் கூட்டத்தில், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல்துறையினா், பள்ளி ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com