ஹிந்தி திணிப்பைக் கண்டித்து திராவிடா் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 05th November 2022 12:46 AM | Last Updated : 05th November 2022 12:46 AM | அ+அ அ- |

ஹிந்தி திணிப்பைக் கண்டித்து, பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் திராவிடா் மாணவா் கழகத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, திராவிட இளைஞரணி மாவட்டத் தலைவா் செ. தமிழரசன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பெ. பெரியசாமி, சி. பிச்சைப்பிள்ளை, ஆ. துரைசாமி, பெ. அண்ணாதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திராவிடா் கழக மாவட்டத் தலைவா் சி. தங்கராசு தொடக்க உரையாற்றினாா். நகரத் தலைவா் தங்கராசு கண்டன உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் மத்திய அரசின் செயலைக் கண்டித்தும், தமிழகத்தில் ஹிந்தி திணிப்பு முயற்சிக்கு எதிா்ப்புத் தெரிவித்தும் முழக்கமிட்டனா்.
இதில், திராவிடா் கழக பொறுப்பாளா்கள் சி. ராசு, அரங்க. வேலாயுதம், இரா. சின்னசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்ற