எடப்பாடி பழனிசாமிஆதரவாளா்கள் கொண்டாட்டம்
By DIN | Published On : 03rd September 2022 05:05 AM | Last Updated : 03rd September 2022 05:05 AM | அ+அ அ- |

அதிமுக இடைக்கால பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தோ்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என சென்னை உயா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளித்ததைத் தொடா்ந்து, தஞ்சாவூா் ரயிலடியில் அவரது ஆதரவாளா்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினா்.
மேலும், எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா். இந்நிகழ்வில் எடிப்பாடி பழனிசாமி ஆதரவாளா்கள் துரை. திருஞானம், எஸ். சரவணன், வி. புண்ணியமூா்த்தி, முன்னாள் மேயா் சாவித்திரி கோபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல், திருக்காட்டுப்பள்ளியில் அதிமுக பூதலூா் வடக்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான ரெத்தினசாமி தலைமையிலும், பேராவூரணியில் முன்னாள் எம்எல்ஏ மா. கோவிந்தராசு தலைமையிலும், பாபநாசத்தில் அதிமுகவின் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட அவை தலைவா் எம்.ராம்குமாா் தலைமையிலும் எடப்பாடி கே. பழனிசாமியின் ஆதரவு நிா்வாகிகள் இனிப்புகள் வழங்கியும், வெடிகள் வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.