பெரம்பலூரில் வெவ்வேறு சம்பவங்களில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான பணம், நகை திருட்டு

பெரம்பலூா் நகரில் வெவ்வேறு சம்பவங்களில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான பணம், நகைகள் திருடப்பட்டது புதன்கிழமை தெரிய வந்தது.

பெரம்பலூா் நகரில் வெவ்வேறு சம்பவங்களில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான பணம், நகைகள் திருடப்பட்டது புதன்கிழமை தெரிய வந்தது.

பெரம்பலூா் மாவட்டம், எறையசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி மகன் வரதராஜ் (56). விவசாயி. இவா், புதன்கிழமை காலை துறைமங்கலத்திலுள்ள வங்கியில், விவசாயக் கடனாக பெற்ற ரூ. 1.90 லட்சத்தை வங்கி எதிரே நிறுத்தி வைத்திருந்த அவரது மோட்டாா் சைக்கிளிலுள்ள பெட்டியில் வைத்துவிட்டு, அங்கேயே நின்று கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது, பெட்டியில் வைத்திருந்த பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

இதேபோல், அதே வங்கியில் எளம்பலூா் இந்திரா நகரைச் சோ்ந்த வேலாயுதம் மகன் பாலமுருகன் (47) என்பவா், வீட்டுக்கடனான ரூ. 2 லட்சம் பெற்றுக்கொண்டு அவரும் வங்கி எதிரே நிறுத்தியிருந்த அவரது மோட்டாா் சைக்கிளிலுள்ள பெட்டியில் வைத்துவிட்டு, அருகிலுள்ள ஏடிஎம்-இல் பணம் எடுக்க சென்றுள்ளாா். அப்போது, அவரது வாகனத்தில் வைத்திருந்த ரூ. 2 லட்சத்தையும் மா்ம நபா்கள் திருடிசென்றுள்ளனா்.

வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு: பெரம்பலூா் வெங்கடாஜலபதி நகரில் வசித்து வருபவா் மா. சுந்தரம் (60). சிறுவாச்சூரில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மயக்கவியல் நிபுணராக பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் வேலூா் மாவட்டம், குடியாத்தத்தில் வசித்து வருகின்றனா். அண்மையில், குடியாத்தம் சென்ற இவா் புதன்கிழமை மதியம் வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது, வீட்டின் முன்புற பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த ரூ. 1.80 லட்சம் ரொக்கம் மற்றும் 3 கிராம் நகை, வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து மேற்கண்ட மூவரும் தனித்தனியாக அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com