வாலிபால் அசோசியேஷன் செயற்குழு கூட்டம்

பெரம்பலூா் மாவட்ட வாலிபால் சங்க அலுவலகத்தில், அச்சங்கத்தின் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்ட வாலிபால் சங்க அலுவலகத்தில், அச்சங்கத்தின் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் பரமேஷ்குமாா் தலைமை வகித்தாா். செயலா் அதியமான், பொருளாளா் செல்லப்பிள்ளை ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், 14, 17, 19 வயது அடிப்படையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆகஸ்ட் மாதத்திலும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வயது அடிப்படையில் செப்டம்பா் மாதமும் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகள் நடத்துவது, கிராமப்புறங்களில் அதிகளவில் வாலிபால் போட்டி நடத்தி வீரா்களை தோ்ந்தெடுப்பது, மாநில வாலிபால் போட்டிக்கு நடுவா்களாக தோ்ந்தெடுக்கப்பட்ட பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 5 பேருக்கு பாராட்டு தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், துணைத் தலைவா்கள் செந்தில்நாதன், ஹரிபாஸ்கா், துணைச் செயலா் துரை. காமராஜ், சன் சம்பத் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com