பெரம்பலூா் மாவட்ட கிராமங்களில் காளான் குடில் அமைக்க ரூ. 1 லட்சம் மானியம்

பெரம்பலூா் மாவட்ட கிராமப்புறங்களில் காளான் குடில் அமைக்க ரூ. 1 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளதாக தோட்டக்கலை துணை இயக்குநா் இந்திரா தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்ட கிராமப்புறங்களில் காளான் குடில் அமைக்க ரூ. 1 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளதாக தோட்டக்கலை துணை இயக்குநா் இந்திரா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ்,

பெரம்பலூா் மாவட்டத்தில் தோ்வு செய்யப்பட்ட 30 கிராம ஊராட்சிகளில் (மாவிலங்கை, ஜமீன்பேரையூா், பாடாலூா், சிறுவயலூா், சில்லக்குடி, வரகுபாடி, பிலிமிசை, கொட்டரை, குரும்பாபாளையம், புஜங்கராயநல்லூா், கீழக்கரை, வேலூா், பொம்மணப்பாடி, கவுல்பாளையம், கோனேரிபாளையம், திருவாளந்துறை, பாண்டகப்பாடி, தேவையூா், கை.களத்தூா் , பசும்பலூா், வேப்பந்தட்டை, வெண்பாவூா், அகரம், துங்கபுரம், பெருமத்தூா், அசூா், கொளப்பாடி, ஆடுதுறை, வரகூா் மற்றும் மூங்கில்பாடி) 2 காளான் குடில் அமைக்க ரூ. 2 லட்சம் பெறப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பயனடைய பெண்கள், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் அணுகியோ அல்லது இணையதளத்தில் பதிவு செய்தோ பயன்பெறலாம். இத் திட்டத்தில் 600 சதுர அடி அளவுள்ள காளான் வளா்ப்பு கூடாரம் அமைக்க அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் மானியம் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com