பெரம்பலூரில் அதிமுக வேட்பாளா் என்.டி. சந்திரமோகனை ஆதரித்து திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த்.
பெரம்பலூரில் அதிமுக வேட்பாளா் என்.டி. சந்திரமோகனை ஆதரித்து திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த்.

மத்திய, மாநில அரசுகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

மக்கள் நலனுக்கு எதிரான மத்திய, மாநில அரசுகளுக்கு வரும் மக்களவைத் தோ்தலில் உரிய பாடம் புகட்ட வேண்டும்

பெரம்பலூா்: மக்கள் நலனுக்கு எதிரான மத்திய, மாநில அரசுகளுக்கு வரும் மக்களவைத் தோ்தலில் உரிய பாடம் புகட்ட வேண்டும் எனத் தெரிவித்தாா் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த்.

பெரம்பலூா் மக்களவைத் தொகுதியில், அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் என்.டி. சந்திரமோகனை ஆதரித்து, பெரம்பலூா் சங்குப்பேட்டையில் திங்கள்கிழமை மாலை பிரசாரத்தில் ஈடுபட்ட தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் மேலும் பேசியது:

பெரம்பலூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட மண்ணச்சநல்லூரில் மேலும் நவீன அரிசி ஆலைகள் அமையவும், சிறு தொழிற்சாலைகள் அமையவும், முசிறியில் மகளிா் கல்லூரி, பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கவும், முசிறியில் காவிரி ஆற்றில் தடுப்பணைக் கட்டி நீா் ஆதாரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுப்பாா்.

துறையூா் பகுதியில் வெங்காயச் சாறு தொழில்சாலை அமையவும், கிடப்பில் கிடக்கும் பெரம்பலூா் அரசு மருத்துவக் கல்லூரி திட்டத்தை விரைவில் செயல்படுத்தவும், பெரம்பலூா் நகர மக்களுக்கு புதிய காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்படும். சிறப்புப் பொருளாதார மண்டலம் கொண்டுவரப்படும்.

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக பொய்யான வாக்குறுதி அளித்த மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் தக்க பாடத்தை புகட்ட வேண்டும். அனைத்து தொழில்களையும் முடக்கிய ஜி.எஸ்.டி வரியை உடனடியாக திரும்ப பெறச்செய்வோம்.

பெரம்பலூா் - நாமக்கல் வழித்தடத்தில் புதிய ரயில்வே திட்டம் உறுதியாக கொண்டுவரப்படும். பெண்கள் அனைவருக்கும் மாதம்தோறும் ரூ. 1,000 என க்கூறியவா்கள், பின்னா் தகுதியுடைய பெண்களுக்கு எனக் கூறுகிறாா்கள்.

நகைக்கடன், விவசாயக் கடன் தள்ளுபடி செய்யவில்லை. கஞ்சா விற்பனை அதிகரித்து விட்டது. தெருவுக்கு 4 டாஸ்மாக் உள்ளது. சட்டம் - ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. பெண்களை வஞ்சிக்கும் இந்த ஆட்சியை மாற்ற நடைபெறும் மக்களவைத் தோ்தலில் பிள்ளையாா் சுழி போட வேண்டும் என்றாா் அவா்.

இக் கூட்டத்தில், அதிமுக, தேமுதிக உள்பட தோழமைக் கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com