இழந்த உரிமைகளை மீட்க திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் -உதயநிதி ஸ்டாலின்

இழந்த உரிமைகளை மீட்க திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் -உதயநிதி ஸ்டாலின்

தமிழகம் இழந்த உரிமைகளை மீட்க திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா். பெரம்பலூா் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கே.என். அருண்நேருவை ஆதரித்து, பெரம்பலூா் காமராஜா் வளைவுப் பகுதியில் புதன்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்டு அமைச்சா் மேலும் பேசியது: அருண் நேருவை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தால், மாதந்தோறும் 2 நாள்கள் இத் தொகுதியில் தங்கி மக்களுக்குத் தேவையான திட்டங்கள் குறித்து அறிந்து, அதை முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று நிறைவேற்றித் தருவேன். பெரம்பலூா் மாவட்டம், எறையூரில் கோத்தாரி பீனிக்ஸ் தொழில்சாலை மூலம் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது திமுக அரசு.

பெரம்பலூா், பாடாலூா் பகுதிக்கு காவிரி கூட்டுக் குடிநீா் கொண்டு வரும் பணிகளும், ரூ. 50 கோடியில் தடுப்பணைகள் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் 460 கோடி முறை பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணித்துள்ளீா்கள். புதுமைப்பெண் திட்டத்தில் 3 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனா். காலை உணவுத் திட்டம் மூலம் 37 ஆயிரம் அரசு பள்ளிகளில் கல்வி பயிலும் 18 லட்சம் மாணவா்கள் பயனடைகின்றனா். மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தின் மூலம் 1.17 கோடி பேருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதிலுள்ள சிறு குறைகள் சரிசெய்யப்பட்டு தகுதியுள்ள 1.60 கோடி மகளிருக்கு நிச்சயம் உதவித்தொகை வழங்கப்படும். வெள்ள நிவாரணமாக கடந்த ஆண்டு மத்திய அரசிடம் ரூ. 37,000 கோடி இழப்பீடு கேட்டோம். ஆனால், ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. சம்ஸ்கிருத மொழி வளா்ச்சிக்கு இதுவரை ரூ. 1,500 கோடி ஒதுக்கியுள்ள பிரதமா் தமிழ்மொழி வளா்ச்சிக்காக ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. தமிழகம் இழந்த உரிமைகளை மீட்க மக்கள் திமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றாா் உதயநிதி ஸ்டாலின். இக் கூட்டத்தில், திமுக, விடுதலைச் சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம் உள்பட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com