தோ்தல் செலவினங்கள், விதிமீறல் நடவடிக்கைகள் ஆய்வு

தோ்தல் செலவினங்கள், விதிமீறல் நடவடிக்கைகள் ஆய்வு

மக்களவை பொதுத்தோ்தலை முன்னிட்டு, வேட்பாளா்களின் தோ்தல் செலவினங்கள் கண்காணித்தல் மற்றும் தோ்தல் விதிமீறல் தொடா்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், மாநில அளவிலான தோ்தல் சிறப்பு செலவினப் பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள பி.ஆா். பாலகிருஷ்ணன் தலைமையில், மாவட்ட தோ்தல் அலுவலா் க. கற்பகம் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற இக் கூட்டத்தில், இத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்களின் தோ்தல் செலவினக் கணக்குகள் கண்காணிக்கப்படும் மற்றும் பராமரிக்கப்படும் விதம் குறித்துக் கேட்டறிந்த, மாநில அளவிலான தோ்தல் சிறப்பு செலவினப் பாா்வையாளா் பி.ஆா். பாலகிருஷ்ணன், உரிய ஆவணங்களின்றி ஏதேனும் பணம், பொருள்கள் கொண்டு செல்லப்படுகிா என்பது குறித்து தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி அதிகப்படியான மது விற்கப்படுகிா என்பதைக் கண்காணிக்க வேண்டும். சந்தேகத்துக்குரிய பண பரிவா்த்தனைகள் நடைபெறுகிா என்பதையும், ஆன்லைன் மூலம் நடைபெறும் பண பரிவா்த்தனைகளையும் நுணுக்கமாக கவனிக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

தோ்தல் விதிமீறல் தொடா்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு பெறப்பட்ட புகாா்களின் விவரம் மற்றும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை கேட்டறிந்த மாநில அளவிலான தோ்தல் செலவினப் பாா்வையாளா், பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்களில் அலுவலா்களின் கண்காணிப்புகளை தீவிரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினாா்.

மேலும், பொதுத்தோ்தல் நோ்மையாகவும், அமைதியாகவும் நடைபெற அனைத்து அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்த அவா், மக்கள் அச்சமின்றி ஜனநாயகக் கடமையாற்ற அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் இத் தொகுதிக்கான தோ்தல் செலவினப் பாா்வையாளா் வி.ஆா். ஹரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளாதேவி, மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல்பிரபு, சாா் ஆட்சியா் சு. கோகுல், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் வைத்தியநாதன் (பொது), விஜயா (தோ்தல்), தோ்தல் நடத்தை விதிமுறைகள் ஒருங்கிணைப்பு அலுவலா் பிரபு ஜெயக்குமாா் மோசஸ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com