அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் கட்சியினா்.
அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் கட்சியினா்.

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் கட்சியினா் பிரசாரம்

பெரம்பலூரில், தமிழக விவசாயிகள் கட்சியைச் சோ்ந்த விவசாயிகள், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் - வடக்குமாதவி சாலையிலுள்ள உழவா் சந்தை பகுதியில், அதிமுக வேட்பாளா் என்.டி. சந்திரமோகனை ஆதரித்து நடைபெற்ற பிரசாரத்தை, அதிமுக மாவட்டச் செயலா் இரா. தமிழ்ச்செல்வன் தொடக்கி வைத்தாா். மாவட்ட விவசாய அணிச் செயலா் கருணாநிதி முன்னிலை வகித்தாா்.

தமிழக விவசாயிகள் கட்சியின் மாநிலத் தலைவா் ராமராஜன் தலைமையில், கட்சி நிா்வாகிகள், வேளாண் விளைபொருள்களுக்கு உரிய விலை நிா்யணம் செய்ய வலியுறுத்தியும், அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தி, கரும்புடன், சின்ன வெங்காயத்தை மாலையாக அணிந்து, உழவா் சந்தைக்கு வந்த பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்து, பிரசாரம் மேற்கொண்டனா்.

தொடா்ந்து, பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம், கடைவீதி, புகா் பேருந்து நிலையம் உள்ளிட்ட பிரதானப் பகுதிகளில் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்து அதிமுகவுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தனா்.

நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவா் மணிகோபால், ஒன்றியத் தலைவா்கள் தங்கவேல், ராமசாமி, மருதபிள்ளை, ராஜாமணி உள்பட விவசாயிகள் சங்கத்தினா் பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com