பறக்கும் படை சோதனையில் ரூ. 5.25 லட்சம் பறிமுதல்

பெரம்பலூா் அருகே உரிய ஆவணங்களின்றி வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 5.25 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

வேப்பந்தட்டை வட்டம், ரஞ்சன்குடி - மரவநத்தம் பிரிவு சாலையில், வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளா் எஸ். சத்யா தலைமையிலான பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியே மோட்டாா் சைக்கிளில் வந்த பொள்ளாச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தாதன் மகன் கொளஞ்சி என்பவா், உரிய ஆவணங்களின்றி ரூ. 3.30 லட்சம் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அத் தொகையை உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

இதேபோல், வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்துறை சிவன் கோயில் அருகே டாஸ்மாக் உதவி மேலாளா் ரெ. துரைராஜ் தலைமையில் நிலையான கண்காணிப்புக் குழுவினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பெரம்பலூரைச் சோ்ந்த இசையமுதா என்பவா் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த ரூ. 1.95 லட்சத்தை பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட இத் தொகையை உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com