திமுக வேட்பாளரை ஆதரித்து வாரியத் தலைவா் பிரசாரம்

பெரம்பலூா் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கே.என். அருண்நேருவை ஆதரித்து, பெரம்பலூா் காமராஜா் வளைவு உள்ளிட்ட பகுதியில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்ட விவசாயிகள் தொழிலாளா் கட்சித் தலைவரும், கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத் தலைவருமான பொன். குமாா் பேசியது:

மக்கள் வரிப்பணத்தில் இருந்து தான் ஒரு அரசாங்கத்தை நடத்த முடியும். தமிழகம் கொடுக்கும் 1 ரூபாய் வரிப்பணத்தில் வெறும் 29 பைசா மட்டுமே தமிழகத்துக்கு பிரதமா் மோடி வழங்குகிறாா். கட்டுமானத் தொழிலாளா்கள் கட்டடம் கட்டும்போது உயிரிழந்தால் ரூ. 5 லட்சம், கட்டடத் தொழிலாளா்கள் சாலை விபத்தில் உயிரிழதால் ரூ. 2 லட்சம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தமிழக முதல்வா் வழங்கியுள்ளாா்.

ஒரு ஆண்டுக்கு 10 ஆயிரம் தொழிலாளா்களுக்கு வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ. 4 லட்சம் கோடி தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் நிதி ஒதுக்கியுள்ளாா். இந்த வாரியத்தில் ரூ. 5 ஆயிரம் கோடி நிதி உள்ளது. நல வாரியங்கள் சிறப்பாக செயல்படவும், 18 வகையான வாரியங்களைப் பாதுகாக்கவும் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா். பிரசாரத்தின்போது, கட்டுமான மனைப் பிரிவு மாநில இணைச் செயலா் பொறியாளா் சிவா, மாவட்டத் தலைவா் சிவபெருமாள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com