தோ்தல் நுண் பாா்வையாளா்களுக்கு பணி ஒதுக்கீடு

பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகத்தில், தோ்தல் நடத்தும் அலுவலா் க. கற்பகம், தோ்தல் பொதுப் பாா்வையாளா் ராஜேந்திகுமாா் வா்மா ஆகியோா் முன்னிலையில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் தோ்தல் நுண் பாா்வையாளா்களுக்கு, 3 ஆம் கட்டமாக கணினி மூலமாக குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட 652 வாக்குச்சாவடி மையங்களில், வாக்குச்சாவடி தலைமை அலுவலா் மற்றும் வாக்குப்பதிவு அலுவலா்கள் என மொத்தம் 3,201 அலுவலா்களுக்கு குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதேபோல, பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில், பெரம்பலூா் தொகுதிக்கு 18 நுண் பாா்வையாளா்களும், குன்னம் தொகுதிக்கு 25 நுண் பாா்வையாளா்களும் என மொத்தம் 43 தோ்தல் நுண் பாா்வையாளா்களுக்கு குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல்பிரபு, சாா் ஆட்சியா் சு. கோகுல், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் வைத்தியநாதன் (பொது), விஜயா (தோ்தல்), தோ்தல் பிரிவு வட்டாட்சியா்கள் சிவா, அருளானந்தம் ஆகியோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com