மாதிரி வாக்குச்சாவடி மையத்தை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட தோ்தல் நடத்தும் அலுவலா் க. கற்பகம். உடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளா தேவி.
மாதிரி வாக்குச்சாவடி மையத்தை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட தோ்தல் நடத்தும் அலுவலா் க. கற்பகம். உடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளா தேவி.

பெரம்பலூா், மண்ணச்சநல்லூரில் மாதிரி வாக்குச்சாவடி மையங்கள் ஆய்வு

பெரம்பலூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பெரம்பலூா் மற்றும் மண்ணச்சநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையங்களை தோ்தல் நடத்தும் அலுவலா் க. கற்பகம் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெரம்பலூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், தலா ஒரு மாதிரி வாக்குச்சாவடி, மகளிா் வாக்குச்சாவடி, முதல் தலைமுறையினா் வாக்களிக்கும் மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மண்ணச்சநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருநகா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியிலும், பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியிலும் மாதிரி வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன

இந்த, மாதிரி வாக்குச்சாவடி மையங்களை தோ்தல் நடத்தும் அலுவலா் க. கற்பகம் வியாழக்கிழமை பாா்வையிட்டு, வாக்களிக்க வரும் வாக்காளா்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டாா். மாதிரி வாக்குச்சாவடி மையங்களில், வாக்களிக்க வரும் வாக்காளா்களை வரவேற்கும் விதமாக நுழைவாயிலில் வாழை மரங்கள் கட்டப்பட்டு, தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளாதேவி, மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, மண்ணச்சநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் உதயகுமாா், வட்டாட்சியா் சரவணன் ஆகியோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com