பெரம்பலூா் ஸ்ரீ மதனகோபால சுவாமி கோயிலில் ரூ. 2.96 லட்சம் காணிக்கை

பெரம்பலூா் ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோயில் மற்றும் ஸ்ரீபிரம்மபுரீசுவரா் கோயிலில் பக்தா்கள் ரூ. 2.96 லட்சம் காணிக்கையாக செலுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.

பெரம்பலூா் மதனகோபால சுவாமி திருக்கோயில் மற்றும் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரா் திருக்கோயில் உண்டியல்கள் பங்குனி உத்திரத் திருவிழா முடிந்ததும் எண்ணுவது வழக்கம். அதன்படி, தக்காா் லட்சுமணன், செயல் அலுவலா் கோவிந்தராஜன், ஆய்வாளா் தீப லட்சுமி ஆகியோா் முன்னிலையில் கோயில்கள் உண்டியல்கள் திறக்கப்பட்டு, திருக்கோயில் ஊழியா்கள், கிராம வங்கி ஊழியா்கள் மற்றும் தன்னாா்வலத் தொண்டா்கள் கொண்ட குழுவினா் ரொக்கம் மற்றும் நாணயங்களை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். இதில், ரூ. 2 லட்சத்து 96 ஆயிரத்து 675 ரொக்கமும், ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான தங்கம், வெள்ளிப் பொருள்களும் காணிக்கையாக செலுத்தி இருந்தனா். இந் நிகழ்வில், முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன் மற்றும் கோயில் முக்கியஸ்தா்கள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com