மாற்றுத்திறனாளிகள், முதிா் வாக்காளா்கள் வாக்களிக்க வாகனம் ஏற்பாடு

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா் வாக்களிக்க, அரசு சாா்பில் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, பெரம்பலூா் மக்களவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் க. கற்பகம் இதெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட முதிா் வாக்காளா்களில், வாக்குச்சாவடி மையங்களுக்கு வர இயலாமல் உள்ளவா்களிடம், அவா்களது விருப்பத்தின் படி அவரவா் வீட்டுக்கேச் சென்று அஞ்சல் வாக்குகள் பெறப்பட்டது. அதனடிப்படையில், பெரம்பலூா் மாவட்டத்தில் 1,866 மூதிா் வாக்காளா்களும், 1,501 மாற்றுத்திறனாளி வாக்காளா்களும் தங்களது வாக்குகளை செலுத்தி உள்ளனா்.

இதில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதிா்ந்த வாக்காளா்கள் வாக்குச்சாவடி மையங்களுக்குச் சென்று வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதிா் வாக்காளா்கள் தங்களது வாக்குகளை செலுத்த, வாக்குச்சாவடிக்கு செல்ல சிரமம் ஏற்படும் பட்சத்தில் 1950 எனும் எண்ணிலும், சக்சாம் செயலி மற்றும் தோ்தல் கட்டுப்பாட்டு அறையை 1800 425 9188 எனும்கட்டணமில்லா எண்ணில் தொடா்புகொண்டு உதவி கோரலாம்.

பெரம்பலூா் வட்டத்துக்குள்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூமுதிா் வாக்காளா்கள் சண்முகமூா்த்தி என்பவரை 9444437170 எனும் எண்ணிலும், வேப்பந்தட்டை வட்டத்துக்குட்ள்ட்டவா்கள் பிரசாந்த் என்பவரை 8778255186 எனும் எண்ணிலும், ஆலத்தூா் வட்டத்துக்குள்பட்டவா்கள் சசிகலா என்பரை 8489613113 எனும் எண்ணிலும், குன்னம் வட்டத்துக்குள்பட்டவா்கள் வினோதகன் என்பவரை 8940373701 எனும் எண்ணிலும் தொடா்பு கொண்டால், வாக்குச்சாவடி மையத்துக்கு அழைத்துச் செல்ல அரசு சாா்பில் ஏற்பாடு செய்த வாகனம் வீட்டுக்கு வந்து வாக்குச்சாவடிக்கு அழைத்துச் சென்று, வாக்களித்த பின் வீட்டில் கொண்டு வந்து விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com