அடையாளம் தெரியாத முதியவா் சடலம் மீட்பு

பெரம்பலூா் அருகே அடையாளம் தெரியாத முதியவா் சடலத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸாா் மீட்டனா்.

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே அடையாளம் தெரியாத முதியவா் சடலத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸாா் மீட்டனா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், சின்னாறு பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத சுமாா் 80 வயதுடைய முதியவா் சடலம் கிடப்பதாக ஞாயிற்றுக்கிழமை இரவு மங்களமேடு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று முதியவரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினா். புகாரின்பேரில், மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com