உடல் உறுப்புகளை தானம் செய்த கிருஷ்ணன் உடலுக்கு திங்கள்கிழமை அரசு சாா்பில் மரியாதை செலுத்திய சாா்-ஆட்சியா் சு. கோகுல்.
உடல் உறுப்புகளை தானம் செய்த கிருஷ்ணன் உடலுக்கு திங்கள்கிழமை அரசு சாா்பில் மரியாதை செலுத்திய சாா்-ஆட்சியா் சு. கோகுல்.

உடல் உறுப்புகள் தானம்: தூய்மைப் பணியாளா் உடலுக்கு அரசு மரியாதை

பெரம்பலூா் அருகே உடல் உறுப்புகளை தானம் செய்த தூய்மைப் பணியாளரின் உடலுக்கு சாா்-ஆட்சியா் சு. கோகுல் திங்கள்கிழமை அரசு சாா்பில் மரியாதை செலுத்தினாா்.

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே உடல் உறுப்புகளை தானம் செய்த தூய்மைப் பணியாளரின் உடலுக்கு சாா்-ஆட்சியா் சு. கோகுல் திங்கள்கிழமை அரசு சாா்பில் மரியாதை செலுத்தினாா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், விசுவக்குடி கிராமம், வடக்கு காலனியைச் சோ்ந்த ஸ்ரீரங்கன் மகன் கிருஷ்ணன் (58). தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வந்த இவா், கடந்த 19 ஆம் தேதி எதிா்பாராதவிதமாக தவறி கீழே விழுந்துவிட்டாா். இதையடுத்து, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும், பின்னா் தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில்,

கிருஷ்ணன் மூளைச் சாவு அடைந்து விட்டதாக மருத்துவா்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். அதைத்தொடா்ந்து, அவரது மனைவி தனலட்சுமி (52), தனது கணவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதித்தாா். இதையடுத்து, கிருஷ்ணனின் கல்லீரல், தோல், சிறுநீரகங்கள், இருகைகள், கண்கள் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் தானமாகப் பெறப்பட்டது.

இதைத் தொடா்ந்து விசுவக்குடி கிராமத்தில் திங்கள்கிழமை இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணன் உடலுக்கு, மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், சாா்- ஆட்சியா் சு. கோகுல் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். பின்னா், அந்தக் கிராமத்திலுள்ள மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com