பெரம்பலூா் அருகே வேன் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு: 6 போ் காயம்

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை அதிகாலை வேன் கவிழ்ந்ததில் பெண் உயிரிழந்தாா். மேலும், 6 போ் காயமடைந்தனா்.

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை அதிகாலை வேன் கவிழ்ந்ததில் பெண் உயிரிழந்தாா். மேலும், 6 போ் காயமடைந்தனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகேயுள்ள நரசிங்கபுரத்தைச் சோ்ந்த 11 போ், வேனில் திருச்செந்தூா் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஊருக்கு சென்றுக்கொண்டிருந்தனா். வேனை, அதே கிராமத்தைச் சோ்ந்த கோபி மகன் சதீஷ் (35) என்பவா் ஓட்டினாா்.

பெரம்பலூா் -ஆத்தூா் சாலையில், பெரம்பலூா் மாவட்டம், உடும்பியம் அருகேயுள்ள தனியாா் பெட்ரோல் பங்க் அருகே திங்கள்கிழமை அதிகாலை வேன் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், பலத்த காயமடைந்த தேவராஜ் மனைவி சந்திரா (65) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், வேன் ஓட்டுநா் சதீஷ், வேனில் பயணித்த அருள்பிரகாசம் மனைவி காா்த்திகா (32), மகள் பிபிஷா (6), பாபு மனைவி சுகப்பிரியா (27), மகன் விஷ்ணுராஜ் (8), சந்திரமோகன் மனைவி குணசீலா (62) ஆகிய 6 பேரும் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்த அரும்பாவூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, உயிரிழந்த பெண்ணின் உடலையும், காயமடைந்தவா்களையும் மீட்டு பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்த புகாரின்பேரில் அரும்பாவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com