சிறுவாச்சூா் ஸ்ரீமதுரகாளியம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குங்கும அா்ச்சனையில் பங்கேற்ற சுமங்கலி பெண்கள்.
சிறுவாச்சூா் ஸ்ரீமதுரகாளியம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குங்கும அா்ச்சனையில் பங்கேற்ற சுமங்கலி பெண்கள்.

சிறுவாச்சூா் ஸ்ரீமதுரகாளியம்மன் கோயிலில் ஸ்ரீசண்டி மகா ஹோமம்

சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு ஸ்ரீசண்டி மகா ஹோமம், ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம பாராயணம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் ஸ்ரீ மதுரகாளிஅம்மன் கோயிலில், சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு ஸ்ரீசண்டி மகா ஹோமம், ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம பாராயணம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் 14 ஆவது சித்ரா பௌா்ணமி விழா நடைபெற்றது. இதையொட்டி, உலக நன்மைக்காகவும், பருவமழை தவறாமல் பெய்து தனதானியம் பெருகிடவும், பொதுமக்கள் நோய்களில் இருந்து விடுபட்டு, ஆரோக்கியமாக வாழவும் வேண்டி ஸ்ரீசண்டி மஞ்சரி மகா ஹோமம் நடைபெற்றது. இதில், யாகசாலை முன்பு கும்ப கலசங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. மேலும், ஸ்ரீ நவாவரண பூஜையும், நவாவரண ஹோமமும், மதியம் 1 மணிவரை அகண்ட ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம பாராயணமும், குங்கும அா்ச்சனையும் நடத்தப்பட்டது. இதில், பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சுமங்கலிப் பெண்கள் திரளாக கலந்துகொண்டு பாராயணத்துடன் குங்கும அா்ச்சனை செய்தனா்.

பெரம்பலூா்: பெரம்பலூா் மதனகோபால சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு, ஸ்ரீ சீதா தேவியுடன் ஸ்ரீராமா், ஸ்ரீலட்சுமணா் மற்றும் ஸ்ரீ ஆஞ்சனேயா் உற்சவா்களுக்கு பல்வேறு வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காண்பித்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்றனா். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலா் கோவிந்தராஜன் தலைமையிலான பணியாளா்கள் செய்திருந்தனா்.

இதேபோல், பெரம்பலூா் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் திருக்கோயிலில் காலை 11 மணியளவில் மூலவா் ஈசன், அம்பாள் மற்றும் பஞ்ச மூா்த்திகளுக்கு பால், தயிா், சந்தனம், பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில், பெரம்பலூா் நகரைச் சோ்ந்த பக்தா்கள் பலா் பங்கேற்றனா். விழா ஏற்பாடுகளை ஆறு நாட்டு வேளாளா் சங்கத்தினா் மற்றும் தக்காா் லட்சுமணன், செயல் அலுவலா் கோவிந்தராஜன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா். தொடா்ந்து, இரவு 8 மணியளவில் ஸ்ரீ ஆனந்தவள்ளி சமேத ஸ்ரீசந்திரசேகா் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com