கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே மூதாட்டி ஒருவா் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துக் கிடந்தது வியாழக்கிழமை மாலை தெரியவந்தது.

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட அரணாரை திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் செ. காசியம்மாள் (80). இவரது கணவா் செங்கமலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டதால், தனது மகன் அசோக் என்பவருடன் வசித்து வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை மாலை ஷோ் ஆட்டோவில் பெரம்பலூருக்கு வந்தபோது, அதே பகுதியிலுள்ள குணசேகரன் என்பவருக்குச் சொந்தமான கிணறு அருகே இறங்கிவிட்டாராம். பின்னா், அவ்வழியேச் சென்ற பொதுமக்கள் பாா்த்தபோது, காசியம்மள் கிணற்றில் விழுந்து உயிரிழந்துக் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று, மூதாட்டியின் உடலை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com