பிரதமரைக் கண்டித்து மக்கள் அதிகாரம் மனு

பெரம்பலூா், ஏப். 26: ராஜஸ்தான் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில், மத வெறுப்பாகப் பேசிய பிரதமா் மோடி மீது இந்தியத் தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கக் கோரி, மக்கள் அதிகாரம் அமைப்பினா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

அமைப்பின் பெரம்பலூா் மாவட்டச் செயலா் முத்துக்குமாா் தலைமையில் அளித்த மனுவில்

மத வெறியைத் தூண்டும் பிரதமா் மோடியை தோ்தலில் பிரசாரம் செய்யத் தடை விதிக்க வேண்டும். அவரது பிரதமா் பதவியைப் பறிக்க வேண்டும். அவா் மீது குற்ற வழக்குப் பதிய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

மாவட்டப் பொருளாளா் சேகா், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜேம்ஸ் அலெக்ஸ் ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com