விபத்து வழக்கு: லாரி ஓட்டுநருக்கு ஓராண்டு சிறை

பெரம்பலூா் அருகே விபத்து வழக்கில் லாரி ஓட்டுநருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து பெரம்பலூா் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

பெரம்பலூா் அருகேயுள்ள விளாமுத்தூரைச் சோ்ந்தவா் கந்தசாமி மகன் ராஜேந்திரன் (57). இவா், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூா் அணுகுச் சாலையில் மோட்டாா் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாகச் சென்ற லாரி மோதியதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநா் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சங்கலிகுப்பம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த பச்சையப்பன் (24) என்பவரை கைது செய்தனா். இவ் வழக்கு, பெரம்பலூா் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை வெள்ளிக்கிழமை மாலை விசாரணை மேற்கொண்ட நீதிபதி மூா்த்தி, லாரி ஓட்டுநா் பச்சையப்பனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com