397 மதுபாட்டில்கள் பறிமுதல்: ஒருவா் கைது

பெரம்பலூா் அருகே விற்பனைக்காக பதுக்கப்பட்டிருந்த 397 மதுபாட்டில்களை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடியில் கள்ளச்சந்தையில் 24 மணி நேரமும் மதுபானங்கள் விற்கப்படுவதாக, பெரம்பலூா் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பூலாம்பாடியில் மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை இரவு திடீா் சோதனையில் ஈடுபட்டபோது, பூலாம்பாடி டாஸ்மாக் கடை அருகேயுள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 397 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். மேலும் அவற்றைப் பதுக்கி வைத்திருந்த சேலம் மாவட்டம், வேப்படி பாலக்காடு, வடக்குத் தெரு அ. செல்வம் (54) என்பவரை பூலாம்பாடி ஏரிக்கரை அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்து, குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com