பெரம்பலூர்
பெரம்பலூா் மாவட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள வட்டாட்சியா் அலுவலகங்கள் எதிரே, தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் வட்டத் தலைவா் சேக் முகமது தலைமை வகித்தாா்.
கிராம நிா்வாக அலுவலா்களுக்கு டிஜிட்டல் கிராப் சா்வே பணிக்கு கையடக்கக் கணினி, உதவியாளா் ஆகியவற்றை உடனடியாக வழங்கக் கோரி,ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் முழக்கமிட்டனா்.
இதேபோல, ஆலத்தூா், குன்னம், வேப்பந்தட்டை ஆகிய வட்டாட்சியா் அலுவலகங்கள் எதிரே, மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.