பெரம்பலூரில் கண்டெடுத்தவைகையெறி நாட்டு வெடிகுண்டுகள்சோதனையில் தகவல்

பெரம்பலூா் இலங்கை அகதிகள் முகாம் அருகே புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டவை, கையெறி நாட்டு வெடிகுண்டுகள் என போலீஸாரின் சோதனையில் வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

பெரம்பலூா் இலங்கை அகதிகள் முகாம் அருகே புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டவை, கையெறி நாட்டு வெடிகுண்டுகள் என போலீஸாரின் சோதனையில் வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம் பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் காகிதத்தால் சுற்றப்பட்ட சுமாா் 16 உருளை வடிவ நாட்டு வெடிகுண்டுகளைப் போன்ற பொருள்கள் பையில் இருந்தது புதன்கிழமை மாலை தெரியவந்தது. இதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளா தேவி சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டாா். பின்னா், பெரம்பலூா் போலீஸாா் மற்றும் வெடி குண்டு நிபுணா்கள் பையிலிருந்த 16 குண்டுகளை சிறுவாச்சூரில் உள்ள தனியாருக்குச் சொந்தமான வெடி மருந்து கிடங்குக்கு எடுத்துச் சென்றனா்.

இதுகுறித்து பெரம்பலூா் (தெ) விஏஓ ராஜதுரை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இந்நிலையில், திருச்சி நகர வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் பிரிவு ஆய்வாளா் எட்வா்ட் தலைமையிலான போலீஸாா் அந்த நாட்டு வெடிகுண்டுகளை வியாழக்கிழமை சோதனை செய்தததில் அவை கையெறி நாட்டு வெடிகுண்டுகள் என்பதை உறுதி செய்தனா். இச் சம்பவம் தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com