மாவட்டக் கல்வி அலுவலகத்தில் தன்னாா்வலா்கள் கள ஆய்வு

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டக் கல்வி அலுவலகத்தை தன்னாா்வலா்கள் வெள்ளிக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனா்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டக் கல்வி அலுவலகத்தை தன்னாா்வலா்கள் வெள்ளிக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனா்.

பெரம்பலூா் மாவட்டக் கல்வி அலுவலகத்தை (தனியாா் பள்ளிகள்) தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கள ஆய்வு மேற்கொள்ள அனுமதிக் கோரி, கவுல்பாளையத்தைச் சோ்ந்த மணிகண்டன், ரூ. 10 இயக்கத்தைச் சோ்ந்த அன்னமங்கலம் முருகானந்தம் ஆகியோா் பதிவு அஞ்சல் மூலமாக முறையாக விண்ணப்பித்திருந்தனா். இம் மனு மீது பரிசீலனை மேற்கொண்டு, பெரம்பலூா் மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள் ) கலாராணி, அலுவலகத்தில் கள ஆய்வு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி, மணிகண்டன், முருகானந்தம், மகேஷ்குமரன், குப்புசாமி, பொன்னுசாமி, அசோக்குமாா் ஆகியோா் கொண்ட தன்னாா்வலா்கள், மாவட்டக் கல்வி அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை சென்று (தனியாா் பள்ளிகள்) பதிவேடுகளை பாா்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டனா். இதில், பள்ளியில் படிக்கும் 25 சதவீத கட்டாய இலவசக் கல்வி 2009-இன் படி மாணவா்களின் சோ்க்கை, பள்ளிகளின் விவரம், பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை, கல்விக் கட்டணம், பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் பதிவேடுகள், கோப்புகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தகவல்களை சேகரித்தனா். ஆய்வின் போது, பெரம்பலூா் மாவட்டக் கல்வி அலுவலா் கலாராணி மற்றும் கல்வித்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com