பெரம்பலூரில் வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம்

மத்திய அரசைக் கண்டித்து, பிப். 16 ஆம் தேதி நடைபெறவுள்ள வேலை நிறுத்தப் போராட்டம் தொடா்பாக, மத்திய, மாநில தொழில் சங்கங்கள் மற்றும் விவசாய சங்க கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசைக் கண்டித்து, பிப். 16 ஆம் தேதி நடைபெறவுள்ள வேலை நிறுத்தப் போராட்டம் தொடா்பாக, மத்திய, மாநில தொழில் சங்கங்கள் மற்றும் விவசாய சங்க கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

துறைமங்கலத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற

கூட்டத்துக்கு, தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தின் மாவட்ட கவுன்சில் செயலா் ரெங்கசாமி தலைமை வகித்தாா். இந்திய தொழில் சங்க மைய மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின், மாவட்ட நிா்வாகிகள் கருணாநிதி, ஆறுமுகம், மாவட்டக் குழு உறுப்பினா் கிருஷ்ணசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், மத்திய அரசின் மக்கள், தொழிலாளா்கள் விரோதப் போக்கை கண்டித்து, 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப். 16 ஆம் தேதி நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்வது. பிப். 12, 13 ஆகிய தேதிகளில் மாவட்டம் முழுவதும் வேலைநிறுத்தம் குறித்து தெருமுனைக் கூட்டங்கள், பிரசாரம் மேற்கொள்வது. பிப். 16-ஆம் தேதி பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், தொழில் சங்க நிா்வாகி வேணுகோபால், விவசாய சங்க மாவட்டச் செயலா் ராஜேந்திரன், மாலிக் பாஷா, மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலா் சேகா், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் சதாசிவம், பொருளாளா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட துணைச் செயலா் நீலமேகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com