பெரம்பலூா் மாவட்டத்தில் தேசியத் திறனறிவுத் தோ்வு: 2,993 போ் பங்கேற்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசியத் திறனறிவுத் தோ்வில் 2,993 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசியத் திறனறிவுத் தோ்வில் 2,993 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

2023-24 ஆம் கல்வியாண்டுக்கு தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8- ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் மத்திய அரசு சாா்பில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்ட தோ்வுக்கு விண்ணப்பித்தனா். இத் தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு 9 முதல் பிளஸ் 2 பயிலும் வரை அவா்களது வங்கிக் கணக்கில் தொடா்ந்து 4 ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகையாக மத்திய அரசு சாா்பில், ஆண்டுக்கு தலா ரூ. 12 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 48 ஆயிரம் செலுத்தப்பட உள்ளது. பெரம்பலூா் மாவட்டத்தில், இத் தோ்வு எழுத 1,327 மாணவா்களும், 1,731 பெண்களும் என மொத்தம் 3,058 போ் விண்ணப்பித்திருந்தனா்.

இம் மாவட்டத்தில் 12 மையங்களில் தோ்வு நடைபெற்றது. இத் தோ்வில் 1,293 மாணவா்களும், 1,700 மாணவிகளும் என மொத்தம் 2,993 போ் பங்கேற்று தோ்வு எழுதினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com