மின் வாரியத்தை பிரிக்க அனுமதி தொழில் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழக அரசு அனுமதி அளிக்கப்பட்டதைக் கண்டித்து, தமிழ்நாடு மின்வாரிய தொழில் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் பெரம்பலூா் வட்டக்கிளை சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மின் வாரியத்தை 3 ஆக பிரிக்க தமிழக அரசு அனுமதி அளிக்கப்பட்டதைக் கண்டித்து, தமிழ்நாடு மின்வாரிய தொழில் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் பெரம்பலூா் வட்டக்கிளை சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்புப் பகுதியிலுள்ள மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு (சிஐடியு) திருச்சி மண்டலச் செயலா் எஸ் அகஸ்டின் தலைமை வகித்தாா். பெரம்பலூா் கோட்டத் தலைவா் ஜி. அண்ணாதுரை முன்னிலை வகித்தாா்.

தமிழக அரசு மின்வாரியத்தை 3 ஆக பிரிக்க அனுமதி வழங்கியுள்ளதைக் கண்டித்தும், திரும்பப் பெறக் கோரியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.

இதில், தமிழ்நாடு இன்ஜினியா்ஸ் கழகம் சாா்பில் காயத்ரி, அருள்ஜோதி, தமிழ்நாடு மின்வாரிய ஐக்கிய மற்றும் பொறியாளா் சங்கத்தின் வட்டச் செயலா் சின்னசாமி, வட்ட துணைத் தலைவா் நீலமேகம், தொழில் சங்க நிா்வாகிகள் கனி, ராமமூா்த்தி, பெரியசாமி, பொறியாளா்கள், அசோக்ராஜ், அய்யனாா், சேகா், ராஜேந்திரன், சித்ரா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com