தூய்மைப் பணியாளா்களுக்கு முழு ஊதியம் வழங்க வலியுறுத்தல்

நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு, ஆட்சியா் அறிவித்தவாறு முழுமையான ஊதியத்தை வழங்கிட வேண்டுமென, மாவட்ட பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


பெரம்பலூா்: நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு, ஆட்சியா் அறிவித்தவாறு முழுமையான ஊதியத்தை வழங்கிட வேண்டுமென, மாவட்ட பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூா் புறநகா்ப் பகுதியான துறைமங்கலத்திலுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சிஐடியு சாா்பில், ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறையில் பணிபுரியும் தூய்மைக் காவலா்கள், பம்ப் ஆப்ரேட்டா், துப்புரவுப் பணியாளா்களுக்கான மாவட்ட அளவிலான சிறப்புப் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தாா்.

இக் கூட்டத்தில், ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறையின் கீழ் பணிபுரியும் தூய்மைக் காவலா்கள், பம்பு ஆப்ரேட்டா், துப்புரவுப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்து, குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26 ஆயிரம் வழங்க வேண்டும். தூய்மைப் பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். 6, 3 ஆண்டுகள் பணி முடித்த தூய்மைக் காவலா்களை பணி நிரந்தரம் செய்து, ஊராட்சிகள் மூலம் நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும். தூய்மைக் காவலா்களை முழுநேர ஊழியராக அறிவித்து, அரசாணை வெளியிட்டு ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், தூய்மைக் காவலா்கள், பம்ப் ஆப்ரேட்டா், துப்புரவுப் பணியாளா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com