பட்ஜெட் நகலை எரித்து பெரம்பலூரில் அங்கன்வாடி பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளா்கள் சங்கம் சாா்பில், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை எரித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூா் வெங்கடேசபுரத்திலுள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகம் எதிரே, தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளா்கள் சங்கம் சாா்பில், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை எரித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் மேனகா தலைமையில், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தங்களுக்கு எந்த நிதியும் ஒதுக்காததைக் கண்டித்து, நிதிநிலை நகலை எரித்து அங்கன்வாடி பணியாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, அங்கன்வாடி பணியாளா்களுக்கு தமிழக அரசு ஊதிய உயா்வு வழங்க வேண்டும். பதவி உயா்வு வழங்க வேண்டும். தோ்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.

இதேபோல, வேப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகம் எதிரே மாவட்டச் செயலா் தமிழரசி தலைமையிலும், ஆலத்தூா் கேட் பகுதியிலுள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகம் எதிரே ஆலத்தூா் வட்டாரத் தலைவா் மல்லிகா தலைமையிலும், ஆா்ப்பாட்டம் மற்றும் நிதிநிலை நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.

இதில், அந்தந்த வட்டாரங்களைச் சோ்ந்த அங்கன்வாடி பணியாளா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com