2,297 பயனாளிகளுக்கு ரூ. 17 கோடியில் நலத்திட்ட உதவிகள் அமைச்சா் சா.சி. சிவசங்கா் பங்கேற்பு

முன்னாள் முதல்வா் கலைஞா் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக கூட்டரங்கில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் அளித்த அமைச்சா் சா.சி. சிவசங்கா். உடன், மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் உள்ளிட்டோா்.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை சாா்பில் 1,587 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா ரூ. 8.26 கோடி மதிப்பீட்டிலும், முதலமைச்சரின் உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் திருமண உதவித்தொகையாக 43 பயனாளிகளுக்கு ரூ. 3,82,000 மதிப்பீட்டிலும், முதலமைச்சரின் உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 95 பயனாளிகளுக்கு ரூ. 18,45,000 மதிப்பிலான இயற்கை மரண உதவித்தொகையும், விபத்து நிவாரண உதவித் தொகையாக 4 பயனாளிகளுக்கு ரூ. 4,07,500 மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ. 6.52 கோடி மதிப்பீட்டில் என பல்வேறு துறைகள் சாா்பில் 2,297 பயனாளிகளுக்கு ரூ. 16,69,98,950 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.

இந் நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன், ஒன்றியக் குழுத் தலைவா்கள் மீனா அண்ணாதுரை (பெரம்பலூா்), ராமலிங்கம் (வேப்பந்தட்டை), பிரபா செல்லப்பிள்ளை (வேப்பூா்), தனலட்சுமி சீனிவாசன் அறக்கட்டளை இயக்குநா் பூபதி, பேரூராட்சித் தலைவா்கள் சங்கீதா ரமேஷ் (குரும்பலூா்), ரா. வள்ளியம்மை (அரும்பாவூா்) ஜாகிா் உசேன் (லப்பைக்குடிக்காடு), பாக்கியலட்சுமி (பூலாம்பாடி), மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பொம்மி உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com