வேலைவாய்ப்பு முகாமில் 30 மாணவா்கள் தோ்வு

பெரம்பலூா் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மிட்சுவா இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய முகாமுக்கு, ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி குழுமத் தலைவா் எம். சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தாா்.

முகாமில் ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியைச் சோ்ந்த சுமாா் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். இதில், நேரடித் தோ்வு மூலம் 30 மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு பணி வாய்ப்புக் கடிதம் வழங்கப்பட்டது.

இதில் கல்வி நிறுவனங்களின் செயலா் எம்.எஸ். விவேகானந்தன், கல்லூரி முதல்வா் எம். மாரிமுத்து மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com