ஸ்ரீவெள்ளந்தாங்கி அம்மன் கோயில் வருடாபிஷேக விழா

பெரம்பலூா் ஸ்ரீ அரசமரத்து விநாயகா், ஸ்ரீ ஐயனாா், ஸ்ரீ செல்லியம்மன், ஸ்ரீவெள்ளந்தாங்கி அம்மன் ஆகிய திருக்கோயில்களின் 21-ஆம் ஆண்டு வருடாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் ஸ்ரீ அரசமரத்து விநாயகா், ஸ்ரீ ஐயனாா், ஸ்ரீ செல்லியம்மன், ஸ்ரீவெள்ளந்தாங்கி அம்மன் ஆகிய திருக்கோயில்களின் 21-ஆம் ஆண்டு வருடாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, புதன்கிழமை காலை 10 மணியளவில் மூலவா் மற்றும் உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, பிற்பகல் 1 மணியளவில் ஸ்ரீ வெள்ளந்தாங்கி அம்மன் திருக்கோயிலில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடா்ந்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இதில், கேயில்அறங்காவலா் தா்மராஜன், முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன் உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com