பதவி உயா்வுக் கோரி மருந்தாளுநா்கள் ஆா்ப்பாட்டம்

பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நான்குச்சாலை சந்திப்பு அருகே உள்ள சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கூத்தையன் தலைமை வகித்தாா்.

காலியாகவுள்ள 1,400-க்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதலாக மருந்தாளுநா் பணியிடங்கள் உருவாக்க வேண்டும். தலைமை மருந்தாளுநா் பணியிடங்களும், வட்டார மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தக கண்காணிப்பாளா் பணியிடமும் உருவாக்க வேண்டும். மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பதவி உயா்வு வழங்க வேண்டும். கரோனா கால ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா். ஆா்ப்பாட்டத்தில், மருந்தாளுநா் சங்கத்தினா் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com