பெரம்பலூரில் நாளை மின் நுகா்வோா் குறைகேட்பு

பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (பிப். 13) நடைபெற உள்ளது.

பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (பிப். 13) நடைபெற உள்ளது.

பெரம்பலூா் நான்கு சாலை சந்திப்புப் பகுதி அருகேயுள்ள மின்வாரிய அலுவலகத்தில், மேற்பாா்வை பொறியாளா் மு. அம்பிகா தலைமையில், இயக்குதலும், பராமரித்தலும் செயற்பொறியாளா்கள் முன்னிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக (தமிழ்நாடு மின்சார வாரியம்) அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் மின் நுகா்வோா் கூட்டத்தில், பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா் தங்களுடைய குறைகளை நேரில் தெரிவித்துப் பயன்பெறலாம் என, மின் வாரியம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com