வாகனம் மோதி நடைப்பயணி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே சனிக்கிழமை இரவு பாதயாத்திரை சென்றவா் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

பெரம்பலூா் அருகே சனிக்கிழமை இரவு பாதயாத்திரை சென்றவா் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், வேப்பூா், அடரி கிராமம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் நல்லத்தம்பி மகன் சதீஷ்குமாா் (24). திருமணமாகாத இவா், தனது குடும்பத்தினா் மற்றும் உறவினா்களுடன் திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு நடைப்பயணமாக சென்றுகொண்டிருந்தாா். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் நான்குசாலை சந்திப்பு அருகேயுள்ள திருமண மண்டபம் பகுதியில் சனிக்கிழமை இரவு சாலையோரம் நடந்துசென்றாா். அப்போது, அவ்வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த சதீஷ்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, இளைஞரின் உடலை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்து குறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com