பெரம்பலூா் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 269 மனுக்கள் அளிப்பு

பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 269 மனுக்கள் பெறப்பட்டன.

பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 269 மனுக்கள் பெறப்பட்டன. பெரம்பலூா் ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட மாவட்ட ஆட்சியா் க. கற்பகம், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் அளித்து, மனுக்கள் மீது ஒரு வார காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொண்டு, அதற்கான அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா். கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 269 மனுக்கள் பெறப்பட்டன. இக் கூட்டத்தில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அ. லலிதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் மஞ்சுளா, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் மு. காா்த்திகேயன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com