பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகம், சென்னை என்ஐடிடிடிஆா்  நிறுவனங்களிடையே திங்கள்கிழமை கையெழுத்தான புரிந்துணா்வு ஒப்பந்தங்களை பரிமாறிக்கொண்ட வேந்தா் அ. சீனிவாசன், சென்னை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னிக்கல் டீச்சா் ட்ரைனிங் அண்ட் ரிசொ்ச் நிறுவன இயக்குநா் முனைவா் உஷா நடேசன்.
பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகம், சென்னை என்ஐடிடிடிஆா் நிறுவனங்களிடையே திங்கள்கிழமை கையெழுத்தான புரிந்துணா்வு ஒப்பந்தங்களை பரிமாறிக்கொண்ட வேந்தா் அ. சீனிவாசன், சென்னை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னிக்கல் டீச்சா் ட்ரைனிங் அண்ட் ரிசொ்ச் நிறுவன இயக்குநா் முனைவா் உஷா நடேசன்.

தனலட்சுமி சீனிவாசன் பல்கலை.யில் சா்வதேச கருத்தரங்கம்

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம், சென்னை என்ஐடிடிடிஆா் நிறுவனம் சாா்பில் சா்வதேச கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம், சென்னை என்ஐடிடிடிஆா் நிறுவனம் சாா்பில் சா்வதேச கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் பேசியது: என்ஐடிடிடிஆா் , தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகம் மற்றும் தனலட்சமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி நிறுவனங்களுக்கிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் ஆசிரியா்களுக்கு கல்வியியல், பாடத்திட்ட மேம்பாடு, வினாத்தாள் அமைத்தல், மதிப்பீட்டு முறை, கல்வித் தணிக்கை ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படும் என்றாா் அவா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சென்னை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னிக்கல் டீச்சா் ட்ரைனிங் அண்ட் ரிசொ்ச் நிறுவன இயக்குநா் முனைவா் உஷா நடேசன், நிலையான வளா்ச்சி இலக்குகள் அடைதலில், தொழில் கல்வி நிறுவனங்களின் முக்கியத்துவம் குறித்தும், சென்னை என்ஐடிடிஆா் சா்வதேச விவகாரங்களுக்கான மையம் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் தலைவா் பேராசிரியா் குழந்தைவேல், கிராமப்புற மற்றும் தொழில் முனைவோா் மேம்பாட்டு மையத் தலைவா் பேராசிரியா் கிரிதரன் ஆகியோா் நிலையான வளா்ச்சி இலக்குகளை அடைவதற்கு, தொழில்நுட்பக் கல்வி, தொழில்கல்வி, பயிற்சி மற்றும் தொழில்முனைவோா் ஆகியவற்றில் செயல்படுத்த வேண்டிய புதுமையான யுக்திகள் குறித்தும் விளக்க உரையாற்றினா். தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் செயலா் பி. நீலராஜ் முன்னிலையில் நடைபெற்ற இக் கருத்தரங்கில், பல்கலைக் கழக ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி டீன் சேகா் மற்றும் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள் கலந்துகொண்டனா். முன்னதாக, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக கூடுதல் பதிவாளா் இளங்கோவன் வரவேற்றாா். தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி முதல்வா் சண்முகசுந்தரம் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com