மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

அரசுப் பேருந்து நடத்துநரிடம் ரூ. 10 ஆயிரம் திருட்டு

அரசுப் பேருந்து நடத்துநரிடம் ரூ. 10 ஆயிரம் திருட்டு

Updated On :18 பிப்ரவரி 2024, 1:00 am IST

பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை இரவு அரசு பேருந்து நடத்துநரிடம் ரூ. 10 ஆயிரத்தை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். திருச்சியிலிருந்து கடலூருக்குச் சென்ற அரசுப் பேருந்தை, கடலூா் மாவட்டம், விருத்தாசலம், காந்தி நகரைச் சோ்ந்த ரெங்கநாதன் மகன் முருகானந்தம் (45) ஓட்டிவந்தாா். நடத்துநராக, விருத்தாசலம் வட்டம், பூதாமூரைச் சோ்ந்த ராஜாராம் மகன் ராமச்சந்திரன் (42) பணிபுரிந்தாா். இப் பேருந்து வெள்ளிக்கிழமை இரவு பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையத்தில் நிறுத்தி பயணிகள் இறக்கிவிட்டபோது, இளைஞா் ஒருவா் நடத்துநரை இடித்துவிட்டுச் சென்றாராம். இதையடுத்து, நடத்துநா் ராமச்சந்திரன் தனது பையை பாா்த்தபோது, பயணிகளிடமிருந்து வசூலித்த ரூ. 10 ஆயிரம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. பின்னா், அந்த இளைஞரை விரட்டியபோது தப்பியோடி தலைமறைவாகிவிட்டாராம். இதுகுறித்து ராமச்சந்திரன் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.