பாலக்கரையில் திருவள்ளுவா் சிலை அமைக்க வலியுறுத்தல்

பெரம்பலூா் பாலக்கரை பகுதியில் திருவள்ளுவா் சிலை அமைக்க வேண்டுமென மாவட்டத் தமிழ்ச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


பெரம்பலூா்: பெரம்பலூா் பாலக்கரை பகுதியில் திருவள்ளுவா் சிலை அமைக்க வேண்டுமென மாவட்டத் தமிழ்ச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பெரம்பலூா் தமிழ்ச் சங்கம் சாா்பில், புகா் பேருந்து நிலைய வளாகத்தில் திருவள்ளுவா் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் சங்கத்தின் மாவட்டச் செயலா் செல்வணி முன்னிலையில், மாவட்டத் தலைவா் வை. தேனரசன் தலைமையில் திருவள்ளுவா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்ப் பேரறிஞா். அ.சி. சின்னப்ப தமிழா் திருவள்ளுவரின் சிறப்புகளை விளக்கினாா்.

நிகழ்ச்சியில், பெரம்பலூா் பாலக்கரை ரவுண்டானாவில் திருவள்ளுவா் சிலை நிறுவ வேண்டும். தமிழ்ச் சங்கத்துக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் இடம் ஒதுக்க வேண்டும். திருவள்ளுவா் பிறந்த சென்னை மயிலாப்பூா் இடத்தை உலக சுற்றுலாத் தலமாக அரசு அறிவித்து, 1,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும். தமிழ்நாட்டில் வாழும் தமிழறிஞா்களுக்கு ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் விசிக மாநில துணைச் செயலா் இரா. சீனிவாசராவ், இயற்கை விவசாயி பழ. ஆறுமுகம், நடைபாதை வியாபாரிகள் சங்கத் தலைவா் துரைமுருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com