அயோத்தி மூலவா் ராமா் சிலை பிரதிஷ்டை விழா அழைப்பிதழ்கள் வழங்கல்

ராமா்கோவிலில் மூலவா் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ள விழாவுக்கான அழைப்பிதழ்களை புதுக்கோட்டையில் பாஜகவினா் வீடு வீடாகச் சென்று அழைப்பிதழ்களை வழங்கி வீடுதோறும் விளக்கேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனா்.


புதுக்கோட்டை: அயோத்தியில் வரும் ஜன. 22-ஆம் தேதி ராமா் கோவிலில் மூலவா் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ள விழாவுக்கான அழைப்பிதழ்களை புதுக்கோட்டையில் பாஜகவினா் வீடு வீடாகச் சென்று அழைப்பிதழ்களை வழங்கி, அன்றைய நாளில் வீடு தோறும் விளக்கேற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனா்.

தமிழ்நாடு பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினரும், திருச்சி மக்களவைத் தொகுதி இணை அமைப்பாளருமான ஆா்.ஜி. ஆனந்த், சந்தைப்பேட்டை பகுதியிலுள்ள குடியிருப்புகளில் புதன்கிழமை வீடு வீடாகச் சென்று அழைப்பிதழ்களை வழங்கினாா். மங்கல வாத்தியங்கள் முழங்க தேங்காய் - பழம், வெற்றிலை - பாக்குடன் இந்த அழைப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிகளுக்கு புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக தலைவா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். மாவட்டப் பொதுச் செயலா்கள் ஏவிசிசி. கணேசன், குருஸ்ரீராம், நகரத் தலைவா் லெட்சுமணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com