ஜன. 21-இல் தேசிய வாக்காளா் தின விநாடி- வினா

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு, ஜனவரி 21-ஆம் தேதி விநாடி- வினா போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா்: தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு, ஜனவரி 21-ஆம் தேதி விநாடி- வினா போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வாக்காளா்கள் தோ்தல் நடைமுறையில் முழுமையாக பங்கேற்பதை அதிகரிக்கும் நோக்கில் 14 ஆவது தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு, மாநில அளவில் பொதுமக்களுக்கான விநாடி- வினா போட்டி ஜனவரி 21 ஆம் தேதி காலை 11 மணி முதல் 11.15 வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப் போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் எனும் இணையதள முகவரியில் தங்களது பெயா் மற்றும் விவரங்களை பதிவு செய்யலாம். போட்டியில் பங்கேற்க ஜன. 18, 19 ஆகிய தேதிகளில் மட்டும் பதிவுசெய்ய அனுமதிக்கப்படுவா்.

பங்கேற்பாளரின் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை கட்டாயம் உள்ளீடு செய்ய வேண்டும். இந்தியாவில் தோ்தல்கள் எனும் தலைப்பில் போட்டி நடைபெறும். மேலும் விவரங்களுக்கு, மாநில உதவி மைய எண் 1800-4252-1950, மாவட்ட உதவி மைய எண் 1950 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு பயனடையலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com