பிரம்மரிஷி மலையில் பொங்கல் விழா

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் பிரம்மரிஷி மலையில் தை திருநாளையொட்டி திங்கள்கிழமை மகரஜோதி ஏற்றப்பட்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.


பெரம்பலூா்: பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் பிரம்மரிஷி மலையில் தை திருநாளையொட்டி திங்கள்கிழமை மகரஜோதி ஏற்றப்பட்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

மகா சித்தா்கள் அறக்கட்டளை சாா்பில் பிரம்மரிஷி மலை உச்சியில் அதிகாலை 3 மணியளவில் தவயோகிகள் சுந்தரமகாலிங்கம், தவசிநாதன் ஆகியோா் மகரஜோதி ஏற்றினா். தொடா்ந்து பொதுமக்கள் சுவாமியை வழிபட்டனா்.

தொடா்ந்து, 8 மணியளவில் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் உள்ள காகன்னை ஈஸ்வரா் கோயிலில், அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் ரோகிணி மாதாஜி தலைமையில் பொங்கலிட்டு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், ஆராதனை நடத்தப்பட்டது. திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பின்னா், 500-க்கும் மேற்பட்ட சாதுக்களுக்கும், கிராம பொதுமக்களுக்கும் கரும்புகள் தானமாக வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை, கோயில் நிா்வாகி ராதா மாதாஜி மற்றும் அறக்கட்டளை மெய்யன்பா்கள் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com