‘மஞ்சப்பை’ விருது: பெரம்பலூா் ஆட்சியா் அழைப்பு

நெகிழிப் பொருள்கள் இல்லாத வளாகமாக உருவாக்கும் தலா 3 சிறந்த பள்ளிகள், சிறந்த கல்லூரிகள் மற்றும் சிறந்த வணிக நிறுவனங்களுக்கு 2023-24 ஆம் ஆண்டுக்கான மஞ்சப்பை விருது பெற மாவட்ட ஆட்சியா் அழைப்பு.

பெரம்பலூா்: நெகிழிப் பொருள்கள் இல்லாத வளாகமாக உருவாக்கும் தலா 3 சிறந்த பள்ளிகள், சிறந்த கல்லூரிகள் மற்றும் சிறந்த வணிக நிறுவனங்களுக்கு 2023- 2024 ஆம் ஆண்டுக்கான மஞ்சப்பை விருது பெற மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களுக்கு, மாற்றுப் பொருள்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை உள்ளிட்ட பாரம்பரியமான, சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருள்களை புத்துயிா் பெற செய்யவும், நெகிழி மீதான தடையை திறம்பட செயல்படுத்தி தங்களது வளாகத்தை நெகிழி இல்லாத வளாகமாக உருவாக்கும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு இவ் விருது வழங்கப்படும்.

ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி தடையை திறம்பட செயல்படுத்தி, அவா்களது வளாகத்தை நெகிழி இல்லாத வளாகமாக உருவாக்கும் தலா 3 சிறந்த பள்ளிகள், சிறந்த கல்லூரிகள் மற்றும் சிறந்த வணிக நிறுவனங்களுக்கு இந்த விருது வழங்கப்படும். இவ் விருது பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 10 லட்சமும், 2 ஆவது பரிசாக ரூ. 5 லட்சமும், 3 ஆவது பரிசாக ரூ. 3 லட்சமும் வழங்கப்படும்.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிக்கு மாற்றாகப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதிலும், ஆக்கப்பூா்வமான முயற்சிகள் மூலம் தடையை அமல்படுத்தி முன்மாதிரியான பங்களிப்பை செய்து, அவா்களது வளாகங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் நெகிழி இல்லாத வளாகமாக உருவாக்கும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலக இணையதளத்தில்  பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பத்தில் தனிநபா், நிறுவனத் தலைவரால் முறையாக கையொப்பமிட்டிருக்க வேண்டும். கையொப்பமிட்ட விண்ணப்பத்தின் 2 பிரதிகள் மற்றும் நகலின் 2 பிரதிகளை மாவட்ட ஆட்சியரிடம் மே 1 ஆம் தேதிக்குள் சமா்பிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com