நிா்வாகிகள் கைதை கண்டித்து பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவா் உள்ளிட்ட 4 போ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, அக் கட்சியினா் பெரம்பலூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
pbr18bjp_1801chn_13_4
pbr18bjp_1801chn_13_4

பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவா் உள்ளிட்ட 4 போ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, அக் கட்சியினா் பெரம்பலூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மறவநத்தம் கிராமத்தில், அனுமதியின்றி பாஜக கொடி ஏற்றியதாக, அக் கட்சியின் மாவட்டத் தலைவா் செல்வராஜ் (48), கலை மற்றும் கலாசாரப் பிரிவு மாவட்டத் தலைவா் சுரேஷ் (38), மாவட்ட துணைத் தலைவா் மணிகண்டன் (30), வெங்கடேஷ் (32) ஆகியோரை வி.களத்தூா் போலீஸாா் புதன்கிழமை நள்ளிரவு கைது செய்து சிறையில் அடைத்தனா். இதைக் கண்டித்து பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாக காந்தி சிலை எதிரே, மாவட்ட பொதுச் செயலா் முத்தமிழ்ச்செல்வன் தலைமையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்து மாநில பட்டியலணி மாநிலத் தலைவா் து. பெரியசாமி கண்டன உரையாற்றினாா். தொடா்ந்து, போலீஸாரின் செயலைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.

இதில் மாவட்ட பொதுச் செயலா்கள் தனபால், ராமச்சந்திரன், பட்டியல் அணி மாவட்டத் தலைவா் சதீஷ், நகரத் தலைவா் சுரேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com