மருத்துவக் காப்பீடு வழங்கக் கோரி சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்கள் பேரணி

மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தினா் பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை

மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தினா் பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை பேரணியில் ஈடுபட்டனா்.

இப் பேரணிக்கு, அச் சங்கத்தின் நிா்வாகி அறம்வளா்த்த நாயகி தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் சுப்பிரமணியன், மாநில செயற்குழு உறுப்பினா்கள் சரோஜா, புலிக்குட்டி ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

மாவட்டத் தலைவா் இளங்கோவன் கோரிக்கை விளக்க உரையாற்றினாா்.

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 6,750-ஐ அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். ஓய்வுபெற்றவா்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும். பள்ளி மாணவா்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியா்களிடம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவா்களுக்கு ஈமச்சடங்கு நிதியாக ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப் பேரணி நடைபெற்றது. பெரம்பலூா் பாலக்கரையில் தொடங்கிய பேரணி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com