குரூப் 4 தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தோ்வுக்கான பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தோ்வுக்கான பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் சாா்பில், டின்பிஎஸ்சி குரூப் 4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த வகுப்புகள் அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.

போட்டித் தோ்வுகளுக்குத் தேவையான அனைத்து சமச்சீா், பாடப் புத்தகங்களுடன் கூடிய நூலக வசதி, வாராந்திர மாதிரி தோ்வுகள், பாட திட்டத்தின்படி நடத்தப்படும்.

பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள் தங்களுடைய ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படங்களுடன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடா்புகொண்டு தங்களை பதிவுசெய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 94990 55913 எனும் கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com